வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50: இல்வாழ்க்கை. நீதிநூல்கள் காட்டும் வழியில் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் அதில் வழிகாட்டி பூமியில் நெறியோடு வாழ்பவன் - அவனோடு வாழும் மக்களால் வானுலகில் வாழும் தேவர்களுக்கு சமமாக போற்றப்படுவான். "வைக்கப்படும்" என்ற இதே வழியில் மேலும் மூன்று குறட்பாக்கள் உள்ளது ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல். ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி. நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை மக்களைக் காக்கும் தெய்வம் என அவர் குடிமக்கள் போற்றுவர் உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும் - குறள் 850: புல்லறிவாண்மை. இருக்கிறது என்று நீதி நூல் வழி வாழும் உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், உடன் இருப்...
திருவள்ளுவர் ஒரு நல்ல நாடு, நல்ல அரசாட்சியின் வேர் எனக் கூறுவது வள்ளுவம் மோசமான் அரசன் கொடுங்கோலன மூட ஆட்சியின் தீமை எனக் கூறுவது ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ( 560 கொடுங்கோ ன் மை ) நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர். இவை முழுமையாக் சங்க கால தமிழ் அரசனின் அறவழியே ஆகும் புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.
Comments
Post a Comment