தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்- என்பதை காட்டும் நடுகற்கள்

தமிழர் மரபில் -வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-என்பதை காட்டும் நடுகற்கள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை.
இந்த உலகத்தில் நீதிநூல்கள் காட்டும் வாழவேண்டிய அறநெறியில் நின்று மற்றவர்களையும் அதே வழியில் வாழ்கின்றவன், பூமியில் வாழும்போதே வானுலகத்தில் உள்ள தேவர்கள் (வான் உலகில் தேவர்கள் வாழ்வார்கள், அவர்கள் தலைவன் இந்திரன் என்பது குறள் 25) போலே வைத்து மதிக்கப்படுவான்.

வைக்கப்படும் என்ற அமைப்பில் வள்ளுவர் மேலும் 3 குறள்களில் வைத்து உள்ளார் வாழும்போது உடன் இருப்போர் அப்படி வைத்துப் பார்ப்பர் என அமைத்துள்ளார்.  

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் - குறள் 214: ஒப்புரவறிதல்.
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்;  உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள் 388: இறைமாட்சி.
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் அரசனை  மக்களைக் காக்கும் தெய்வம் என அவர் குடிமக்கள் போற்றுவர்
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் - குறள் 850: புல்லறிவாண்மை.
இருக்கிறது என்று நீதி நூல் வழி வாழும் உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், உடன் இருப்பவர்களால் இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

வைக்கப்படும் என 3 குறள்களில் வாழும்போது உடன் இருப்போர் அப்படி வைத்துப் பார்ப்பர் என அமைத்துள்ளார்.

நம் மேலே பார்த்த நான்கு குறட்பாக்களிலும் உடன் வாழும் மக்கள் அவரை செத்தாருள்,  இறை, பேய் எனக் கருதுவர், என்பது போலே வாழ்வாங்கு வாழ்பவர் நிலை  உடன் வாழ்பவர்ளால்  பூமியில் வாழும்போதே வானுலகத்தில் உள்ள தேவர்கள் போலே வைத்து மதிக்கப்படுவான், அவர் தெய்வம் ஆகிவிட்டாதாக வள்ளுவர் கூறினார் என்பது திருவள்ளுவர் உள்ளத்தின் வழி அல்ல, தவறான  நச்சுக் கருத்து வள்ளுவம் மீது திணிக்கப் படுகிறது.

திருவள்ளுவர் காட்டும் மெய்யியல் மரபில் - மனிதன் பிறப்பு என்பது தூங்குவது போல, மீண்டும் அதே ஆத்மா மீண்டும் பிறப்பது என்பது தூங்கி எழுவது போலே எனத் தெளிவாக உறைப்பார். 
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை.
நிலையான இந்த உயிர் இந்த பூவுலக வாழ்வில் புண்ணியம் (நல்ல அறச் செயல்கள்) செய்தால் தேவர்கள் வாழும் சொர்கம் செல்வர், பாவங்கள் (அறத்திற்கு மாறான செய்தல்) விடியாத இருள் கொண்ட‌ நரகத்தில் தள்ளி விடும் என்கிறார்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.              குறள் 121: அடக்கமுடைமை.
மேலுள்ள குறளில் தன் பிறப்பு நிலையில் அடக்கத்தோடு இருந்தால் தேவர்கள் உலகிலும், அடங்காமை  விடியாத இருள் கொண்ட‌ நரகத்தில் தள்ளி விடும் என்கிறார்.
மனித வாழ்வின் லட்சியம் என்பது மீண்டும் பிறந்து இறந்து பிறந்து என நிலை. 
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.   குறள் 362: அவாவறுத்தல்
பிறவிப் பெருங்கடலில் சிக்காமல் இறைவனோடு கலத்தல்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து.
திருவள்ளுவர் இல்வாழ்க்கை அதிகாரத்தில் குறள்-50 கூறுவதும் அறவழியில் அனைவரும் போற்றும் வழியில் வாழ்ந்தால் தேவர்கள் வாழும் வானுலகில் வைக்கப் படுவாய் (அமரரும் உய்க்கும் என்பது போலே) என்பதே.

இந்தக் குறளை வைத்து தமிழர்கள் முன்னோரை வழிபட்டனர், அதற்கு உதாரணம் நடுகல் என அன்னிய காலனி ஆதிக்க மதமாற்று கும்பலும் அதன் அடிமை நவீன தமிழ் புலவர்களும் தமிழ் மரபை ஏற்காத மடமையில் கூறுவது 

 வீரன் சண்டையின்போது இறந்து படுகிறான். அவன் மனைவி அவனோடு உடன்கட்டை ஏறுதல் முறையில் உயிர் நீக்கின்றாள். அவளையும் வீரனையும் சுவர்க்கம் என்னும் மேலுலகத்துக்குத் தேவமகளிர் அழைத்துச்செல்கின்றனர். சிவலோகம் சென்ற வீரன் சிவலிங்கத்தை வழி படுகிறான்.
நாம் மேலே காணும் நடுகற்கள் கூறுவது - நாட்டு நன்மைக்காக பலியானவரைப் போற்ற நடுகல் வைப்பர், ஆனால் அவர் இறைவன் உலகம் அடைந்தார் என வணங்குதல், இது முன்னோர் வழிபாடு இல்லை.

Comments

Popular posts from this blog

திருக்குறள் காட்டும் ஷத்திரியருக்கான அறம்

திருக்குறள்- சங்கத் தமிழர் மரபில் வேதங்களும் பிராம‌ணர்க‌ளும்

வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - திருவள்ளுவர் கூறுவது என்ன